Schools

 

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் தொன்மையும் பல் சிறப்பும் பெற்ற கிராமமாக மூளாய்க் கிராமம் அமைந்துள்ளது. பல் வளம் கொழிக்கும் இக் கிராமத்தில் எம்மை வாழ்வாங்கு வாழவைக்கும் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கும் சாலைகளாக மூளாய் சைவபிரகாச வித்தியாலயமும், மூளாய் அமெரிக்கன் மிஷன் அரச தமிழ்க் கலவன் பாடசாலையும், மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் நடாத்தப்படும் சிறுவர் பாடசாலையும், சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பரிபாலன சபையால் நிர்வகிகப்படும் ஞானஒளி அறநெறிப் பாடசாலை என்பனவும் திகழ்கின்றன.

 

1908 ஆம் ஆண்டு ஸ்ரீமான் கந்தையபிள்ளை என்ற அன்பரினால் ஆரம்பிக்கப்பட்ட சைவபிரகாச அன்னை ஸ்தாபகரின் தூய உள்ளத்தின் சிந்தனைக்கமைவாக சைவமும் தமிழும் தழைத்தோங்க பல கல்விமான்களை உருவாக்கி சமூக வளர்ச்சிக்கு அடிகோலி வருகின்றது. படிப்படியாக பௌதீகவளம் அதிகரிக்க அதன் மூலம் நாடி வரும் சிறார்களுக்கு பலதுறைக் கல்வியும் ஒழுக்கமும் சிறப்புற வழங்கி பலர் போற்ற உயர்ந்து நிற்கின்றது.

 

சைவபிரகாச அன்னைக்கு அருகில் மூளாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை .... ஆண்டிலிருந்து ஆரம்பநிலைப் பாடசாலையாக சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி வழங்கிவருகிறது.
 

ஆரம்பநிலைக் கல்வி பெறச்செல்லும் மாணவர்களை பக்குவப்படுத்தி மகிழ்வுடன் கற்பதற்கான வழிகாட்டல்களை வழங்கும் சிறுவர் முன்பள்ளி ஆலயச்சூழலில் இயங்கி வருகின்றது.
 

கல்வியும் நல்லொழுக்கமும் சிறாருக்கு அவசியம் என்ற கருத்தினை மனத்திருத்தி சமய பழக்கவழக்கத்தையும் நல்லொழுக்கத்தையும் சிறுவர்களுக்கு வழங்கி வரும் ஞானஒளி அறநெறிப் பாடசாலையும் கல்விப் பணியாற்றி வருகின்றது. இவ் நிறுவனங்களின் அயராத உழைப்பு எம் மாணவர்களில் கல்வி நிலையை உயர்த்தி வருகின்றது.

 


logo
Time & Weather in Moolai now is:
????????? ???????