யா / மூளாய் சைவபிரகாச வித்தியாலயம்

 

யா / மூளாய் சைவபிரகாச வித்தியாலயம்

 

(In English...)

 

 

மூளாயில் 1908ஆம் ஆண்டில் ஸ்ரீமான் சி. கந்தையாபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே யா / மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகும். சித்தி விநாயகராலய மடத்திலே உருவாகிய இக்கல்விக்கூடம் 1912இல் ஓலைக் கொட்டிலில் உரிய இடத்திற்கு இடம்மாறி 1924இல் வைரக்கற்களினால் அமைக்கப்பட்ட குடாநாட்டுப் பாடசாலையாக வளர்ந்து இன்று மாடிக்கட்டிடம் கொண்ட வித்தியாலயமாக மிளிர்கிறது.

 

கல்வி பொது தர (க.பொ.த) சாதாரண தரம் வரை கொண்ட வகை 2 பாடசாலையான இவ்வித்தியாலயம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவதுடன் தேசிய மட்டத்திலும் விளையாட்டு, நடனம், பேச்சு, சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கால்பதித்து முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தரம் 5 புலமைப்பரிசில், க. பொ. த சாதாரண தரம் ஆகிய தேசியப் பரீட்சைகளில் சிறந்த சித்தி வீதங்களை வெளிப்படுத்தி வரும் இவ்வித்தியாலயத்தில் அதிபருடன் 22 ஆசிரியர்களும் சுமார் 500 மாணவர்களும் இணைந்து செயற்படுகின்றனர்.


logo
Time & Weather in Moolai now is:
????????? ???????